திண்டுக்கல்,28.9.2020: பழனியில் வரவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர்,28.9.2020: சென்னை தண்டையார்பேட்டையில் திமுக கூட்டணிகள் கட்சி சார்பாக வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,28.9.2020: சென்னை திருவிக நகரில் ஈழ போராளி திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது.

கோவை,28.9.2020: வால்பாறையில் வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மத்திய மாநில அரசை கண்டித்து திமுக கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,28.9.2020: ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு ஆத்தூர் தாலுகா அலுவலகத்தில் துணை ஆட்சியர் சிவக்குமார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இராமநாதபுரம்,28.9.2020: இராமநாதபுரத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் சுமார் 500 இடங்களில் 3.5லட்சம் பேர் வேளாண் சட்ட மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,28.9.2020: கன்னியாகுமரி தொடங்கி,களியக்காவிளை வரையில் மாவட்த்தில் இன்று. தி மு க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும். பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து,மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று கருப்பு சட்டங்களை கண்டித்து.குமரி மாவட்டத்தில் 100 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்,28.9.2020: நத்தம் அருகே செந்துறையில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ.பங்கேற்பு.

Show more post